Friday, April 2, 2010

வாக்குப்பதிவு இயந்திரம் - பென்னாகரம்




http://sdprabhakar.blogspot.com/2009/12/50.html

ஏற்கனவே இயந்திர வாக்குப்பதிவுகளில் மக்களிடம் இருக்கும் பதட்டமும் அதன் மூலம் முக்கிய கட்சிகளின் வாக்குகள் தங்களுக்கு சேராமல் சிதறுவதையும் திருச்செந்தூர் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் உதவி கொண்டு கணித்திருந்தோம். இப்போது பென்னாகரம் இடைத்தேர்தலில் அதேபோல் நடக்கும் வாக்குச்சிதறலால் எதிர் கட்சியான அதிமுக டிபாசிட் தொகையை இழக்கும்சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த முறை அதிமுக, திமுக, பாமக வரிசையே 1,2,3வது இடங்களில்உள்ளனர். முதல் இயந்திரத்தில் உள்ள கடைசி மூன்று இடங்கள் (14,15,16)இரண்டாவது இயந்திரத்தில் முதல் மூன்று இடம் (17,18,19) மற்றும்கடைசி மூன்று (29,30,31) ஆகிய இடங்கள் வாங்கிய சராசரி வாக்கு எண்ணிக்கை 813 ஆகும். இவர்களைத் தவிர்த்து மற்ற சுயேச்சைகள்வாங்கிய சராசரி வாக்கு எண்ணிக்கை 291 ஆகும்.


அதிமுக வேட்பாளர் கூடுதலாக 1690 வாக்குகள் வாங்கியிருப்பாரேயானால் டிபாசிட் கிடைத்திருக்கும். இந்த இயந்திரசிக்கலால் அதற்கான வாய்ப்பு பறிபோனது என்று கூட சொல்லலாம்.





இனியாவது இந்த வாக்கு இயந்திரத்தில் உள்ள சிக்கலால் ஏற்படும் விளைவுகளை விவாதித்து நாம் ஒரு நல்ல தீர்வு கானவேண்டும்.